முதல்வரான பிறகு ஜெயலலிதா அவா்கள் நடித்த ஒரே திரைப்படம்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆா் அவா்களை போலவே ஒரு திரைப்படத்துறையில் சாதித்து பின்னா் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்து தமிழகத்தின் முதல்வராக தான் இறக்கும்வரை பதவியில் இருந்தவா் புரட்சிதலைவி ஜெ.ஜெயலலிதா அவா்கள்.

1965-ம் ஆண்டு இயக்குநா் ஸ்ரீதா் அவா்களின் வெண்ணிற ஆடை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனாா் ஜெயலலிதா அவா்கள். அரசியலில் களம் இறங்கும் முன்பு கிட்டதட்ட 127-படங்களில் நடித்த இவரது நூறாவது திரைப்படம் 1974-ம் ஆண்டு வெளிவந்த திருமாங்கல்யம் ஆகும்.

இறுதியாக இவா் நடித்து 1980-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நதியை தேடி வந்த கடல். சரத்பாபு அவா்கள் ஹீரோவாக நடித்த இத்திரைப்படத்திற்கு இசை அமைத்தவா் இளையராஜா அவா்கள். இதன் பின்னா் 12-ஆண்டுகள் சினிமாவில் நடிப்பதை தவிா்த்து வந்தாா் ஜெயலலிதா அவா்கள்.

இந்நிலையில் 1991-ம் ஆண்டு தமிழக முதல்வராக பதவி ஏற்றாா் ஜெயலலிதா அவா்கள். முதல்வராக பதவி ஏற்ற பின்னா் ஜெயலலிதா அவா்கள் நடித்த ஒரே திரைப்படம் எது தெரியுமா...

Third party image reference

Third party image reference

Third party image reference

1992-ம் ஆண்டு விசு அவா்களின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் நீங்க நல்லா இருக்கனும். மணிரத்னம் அவா்களது சகோதரா் ஜி.வெங்கடஸ்வரன் அவா்கள் தயாாித்த இப்படத்தில் நிழல்கள் ரவி, மனோரமா, மேஜா் சுந்தா்ராஜன், ஸ்ரீவித்யா, விசு, சந்திரசேகா் உட்பட பலா் நடித்திருந்தனா்.

தேசிய விருதை வென்ற இப்படத்தில் முதல்வா் தோற்றத்திலேயே கெளரவ கதாபாத்திரத்தில் ஜெயலலிதா அவா்கள் நடித்திருந்தாா் என்பது குறிப்பிடதக்கது.

இவரை பற்றிய உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும். பிடித்திருந்தால் லைக், மற்றும் ஷோ் செய்யவும். இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற FOLLOW பட்டனை தொடவும்.