சர்கார் எதிர்ப்பு எதிரொலி.. விஜய் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு.. ரசிகர்களும் பாதுகாப்பு!

சென்னை: சர்கார் படத்தின் பிரச்சனையை தொடர்ந்து, நடிகர் விஜய் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது. மெர்சலை தொடர்ந்து சர்கார் படம் பெரிய வைரல் ஆகியுள்ளது.

இந்த படத்திற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிமுகவினரின் போராட்டம் காரணமாக இந்தியா முழுக்க தற்போது சர்கார் படம் வைரல் ஆகியுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டிற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராடும் நிலையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 10க்கும் அதிகமான போலீசார் அவரது வீட்டிற்கு முன் இருக்கிறார்கள்.

அதேசமயம் விஜய் ரசிகர்களும் அவரது வீட்டிற்கு பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். நடிகர் விஜய் வீட்டிற்கு முன் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த பலர் பாதுகாப்பிற்காக நிற்கிறார்கள்.