முதல்வரை சந்திக்க அப்பாய்ன்மெண்ட் கேட்ட விஜய்

'சர்கார்' படத்தை கடித்துக் குதறிய வகையில் தாங்கள் நினைத்ததை சாதித்துவிட்ட தெனாவெட்டில் அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி அனைவரும் 'விஜய் நல்லவரு வல்லவரு... ஏதோ போதாத நேரம் ஏ.ஆர்.முருகதாஸ் கூட சேர்ந்து புத்தி கெட்டுப்போச்சி' என்று இறங்கிவர ஆரம்பித்திருக்கிறார்கள்.

 

அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரோ இன்னும் ஒரு படி மேலே போய் சர்ச்சையான காட்சிகளை நீக்கிய படக்குழுவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத்தெரிவித்து இனி இதுபோல யாரும் படம் எடுக்கக்கூடாது என்று எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.

 

இந்த தற்காலிக சமரத்தின் அடுத்த கட்டம்...? முதல்வரை விஜய் சந்தித்து நன்றி தெரிவிப்பதுதானே?? யெஸ் அதற்கான ஏற்பாடுகள் சீரும் சிறப்புமாக நடந்து வருகிறதாம். அநேகமாக இன்று மாலையே முதல்வர் -விஜய் சந்திப்பு நடக்கலாம் என்றும் மக்கள் மனதைப் புண்படுத்திய காட்சிகளுக்காக, முன்னாள் முதல்வர் ஜெ' பெயரை வில்லி கேரக்டருக்கு சூட்டியதற்காக படக்குழுவினர் சார்பில் விஜய் வருத்தம் தெரிவிக்கும் அறிக்கையும் வெளியாகக்கூடும் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.

சினிமா சர்காரும் ஒரிஜினல் சர்காரும் சந்திக்கும்போது...அரசியல்ல மட்டுமில்ல சினிமாவுலயும் இதெல்லாம் சகஜமப்பா...