திடீரென்று தற்கொலை செய்து அதிர்ச்சி தந்த தமிழ் சினிமா பிரபலங்கள்!

முதலில் ஒருவரை தற்கொலைக்குத் தூண்டுவது மன அழுத்தம் தான். மேலும், வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகளை எதிர்கொள்ளத் தெரியாமல் பலர் தற்கொலைக்கு துணி கின்றனர். இந்த துணிவு அந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வராதது மிகவும் வருந்தத்தக்கது.

இப்படி தற்கொலை செய்து கொண்ட நடிகர் நடிகைகள் தமிழில் சிலர் உள்ளனர். அவர்களில் பலர் மன அழுத்தம் மற்றும் கஷ்டங்களை எதிர்கொள்ள தெரியாததால் தான் தற்கொலை செய்துள்ளனர். மேலும் அவர்களுள் சிலரது மரணங்கள் இதுவரை காரணங்கள் தெரியாமல் மர்மமாகவே உள்ளது அப்படி. தமிழ் சினிமாவில் தற்கொலை செய்து கொண்ட பிரபலங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் ....

திடீரென்று தற்கொலை செய்து அதிர்ச்சி தந்த தமிழ் சினிமா பிரபலங்கள்!

Third party image reference

★ஷோபனா:

பிரபல நகைச்சுவை நடிகையான சோபனா, தன் காதலில் தோல்வியடைந்ததோடு மற்றும் சிக்கன்குனியா மற்றும் ஆஸ்துமாவால் கஷ்டப்பட்டதால், அவரால் திரைப்படங்களில் தொடந்து நடிக்க முடியாமல் இருந்ததால், மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டார்.

Third party image reference

★ஃபடாஃபட் ஜெயலட்சுமி:

நடிகை படாபட் ஜெயலட்சுமி காதல் தோல்வியால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

Third party image reference

★திவ்யபாரதி:

நடிகை திவ்யபாரதி தனது 19 வயதில், கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்ற காரணம் இதுவரை தெரியவில்லை.

Third party image reference

★மோனல்:

இவர் பிரபல நடிகை சிம்ரனின் சகோதரி ஆவார். காதல் தோல்வியால் மனமுடைந்து, வீட்டில் உள்ள சீலிங் பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

Third party image reference

★பிரதியுஷா:

நடிகை பிரதியுஷா மற்றும் அவரது காதலரான சித்தார்த் ரெட்டி, பொது இடத்தில் காரில் அமர்ந்து கொண்டு ஜூஸில் விஷத்தைக் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அப்படி குடித்ததில் பிரதியுஷா இறந்துவிட்டார் ஆனால் காதலன் சித்தார்த் உயிர் பிழைத்தார்.

Third party image reference

★நடிகர் குணால்:

நடிகர் குணால் தனது வீட்டில் சில பிரச்சனையின் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகி, தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

Third party image reference

★மயூரி:

மலையாள நடிகையான மயூரி தமிழிலும் நடித்துள்ளார். இவர் தனது வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து விட்டதாக கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு, தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

Third party image reference

★சில்க் ஸ்மிதா:

இவர் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான நடிகை ஆவார். தன் சொந்த வாழ்க்கை மற்றும் தொழிலிலுள்ள பிரச்சனைகளால், மன இறுக்கத்திற்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டார்.

★குறிப்பு★

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து நடிகர், நடிகைகளும், மன அழுத்தம், பிரச்சனைகளை எதிர்கொள்ளத் தெரியாமலிருப்பது மற்றும் காதல் தோல்வி போன்றவற்றால் தான் தற்கொலை செய்துள்ளனர். இப்படி தற்கொலை செய்துகொண்டதால் இவர்களுக்கு என்ன லாபம் கிடைக்குமென்று சொல்லுங்கள் பார்ப்போம்!....

இதில் அவர்களின் கோழைத்தனம் தான் தெரிகிறது. எப்போதுமே எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை செய்துகொள்வதன் மூலம் தீர்வு கிடைக்காது. மனதைரியத்துடன் நம் பிரச்சனைகளை எதிர்த்து நின்று பாருங்கள், நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.