அஜித் ரசிகர்களுக்கு வர போகும் புதிய விருந்து :பக்கா மாஸ்

அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் படங்களுக்கு வரும் ஓப்பனிங் எல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

அந்த அளவிற்கு பிரமாண்ட ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் பொங்கலுக்கு வரவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துவிட்டது, இந்நிலையில் அதிவிரைவில் படத்தின் மோஷன் போஸ்டர் வர, அடுத்தடுத்து டீசர், ட்ரைலர் என வரிசையாக வரவுள்ளதாம், பிறகு என்ன தல ரசிகர்களே கொண்டாட்டத்திற்கு ரெடியாகுங்கள்.