சர்காரில் ஒன்னுல்ல, இரண்டுல்ல 4 தப்பு செய்த முருகதாஸ்

சென்னை: சர்கார் படத்தில் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் நான்கு தவறுகள் செய்துள்ளார்.

சர்கார் படத்தில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தவறு செய்துள்ளார். ஆம், ஒன்றல்ல இரண்டல்ல, நான்கு தவறுகளை செய்துள்ளார். அந்த தவறுகளுக்காகத் தான் எதிர்ப்பு கிளம்பியிருக்கும்.

அந்த தவறுகளை செய்யவும் தனி தைரியம் வேண்டும். அது தனக்கு உள்ளது என்று நிரூபித்துள்ளார் முருகதாஸ்.

பதில்

ஆட்சி செய்பவர்களிடம் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற முக்கியமான விஷயத்தை மக்களுக்கு புரியும்படி சொல்லிக் கொடுத்துள்ளார் முருகதாஸ். கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காகவே விஜய் எதிர்க்கட்சியை தேர்வு செய்த காட்சி அருமை. இது தான் முருகதாஸ் செய்த முதல் தவறு.

தீர்வு

தமிழகத்தில் சில பிரச்சனைகள் தீர்வு இல்லாமல் இழுத்துக் கொண்டே இருக்கிறது. மக்களும் போராட்டம் செய்து, கோஷமிட்டு ஓய்ந்து விட்டனர். இந்நிலையில் அந்த பிரச்சனைகளுக்கு ஏன் தீர்வு ஏற்படவில்லை என்ற மிக மிக்கியமான பதிலை சர்கார் படம் மூலம் அளித்துள்ளார் முருகதாஸ். இது அவர் செய்த இரண்டாவது தவறு.

49 பி

தேர்தல் நேரத்தில் கள்ள ஓட்டு போடப்படுவது அனைவருக்கும் தெரியும். ஆனால் 49 பி என்ற ஒரு சட்டம் மூலம் நம் ஓட்டை யாராவது கள்ள ஓட்டாக போட்டிருந்தால் நாம் அதை மீண்டும் போட முடியும் என்பதை சொல்லிக் கொடுத்துவிட்டார் முருதாஸ். சர்கார் படத்தால் 49 பி சட்டம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. இது அவர் செய்த மூன்றாவது தவறு.

ஓட்டு

ஓட்டு போடுவதற்காக பணம், இலவசங்களை பெற வேண்டாம் என்பதை எதார்த்தமாக சொல்லியுள்ளார் முருகதாஸ். இலவசங்களை வாங்கிய பாவத்திற்காக கையிலும், காலிலும் கேட்டு அடி வாங்கிய காட்சி நெத்தியடி. இது முருகதாஸ் செய்த நான்காவது தவறு.

ஊழல்

ரமணா படத்தில் ஊழல் செய்த பெரிய ஆட்களை கடத்தி கொலை செய்யும் காட்சிகளை வைத்தார் முருகதாஸ். ரமணா போன்று தமிழகம் முழுவதும் நெட்வொர்க் வைத்து ஆட்களை நோட்டம் பார்த்து கடத்தி, கொலை செய்வது என்பது கிட்டத்தட்ட நடக்காத காரியம் என்று கூட கூறலாம். ஆனால் முருகதாஸ் சர்காரில் தெரிவித்துள்ள விஷயங்கள் எதார்த்தமானவை, மக்கள் மனது வைத்தால் நிச்சயம் நடக்கக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.