சென்னையில் சர்கார் பட பேனர்கள் அகற்றம்.. போலீஸ் நடவடிக்கை.. விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: சர்கார் படத்திற்கு அதிமுக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் உள்ள பல தியேட்டர்கள் முன் இருக்கும் சர்கார் பட பேனர்கள் கட்டாயப்படுத்தி அகற்றப்படுகிறது.

நேற்று முதல்நாள் விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் வெளியானது. இந்த படத்தில் நிறைய அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் உள்ளது.

இந்த காட்சிகள் அதிமுகவினரை பெரிய அளவில் சீண்டி இருக்கிறது. இதனால் சர்கார் படத்திற்கு அதிமுக போராடி வருகிறது.

 

எதிர்ப்பு 
கடும் எதிர்ப்பு

அதிமுகவினர் தமிழகம் முழுக்க சர்கார் படத்திற்கு எதிராக போராடி வருகிறார்கள். பல இடங்களில் இதனால் சர்கார் காட்சிகள் சில ரத்து செய்யப்பட்டுள்ளது. சில தியேட்டர்களுக்கு கடும் போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 

நீக்கினார்கள் 
நீக்கி வருகிறார்கள்

இந்த நிலையில் தற்போது சென்னையில் உள்ள முன்னணி தியேட்டர்கள் பலவற்றின் முன் உள்ள சர்கார் பட பேனர்கள் நீக்கப்பட்டு வருகிறது. காசி தியேட்டர் உழைத்த தியேட்டர்கள் முன் இருக்கும் பேனர்கள் நீக்கப்படுகிறது. மற்ற பகுதிகளில் உள்ள பேனர்களும் இன்று நீக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 

Pramod Madhav@madhavpramod1

@actorvijay fans removing banner from Kaasi theater.
Says that they had to do so due to certain pressure.

This set alone had cost them 1.2 lakhs.

4:49 PM - Nov 8, 2018

Twitter Ads info and privacy

அழுத்தம் 
சிலர் அழுத்தம்

 

இதற்கு விஜய் ரசிகர்கள் சிலர் அழுத்தம் காரணமாக இந்த பேனரை அகற்றுவதாக தெரிவிக்கிறார்கள். சில அரசியல்வாதிகள் அழுத்தம் கொடுத்ததாக விஜய் ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள். இதன் காரணமாகவே பேனரை அகற்றுவதாக தெரிவித்துள்ளனர்.

 

Pramod Madhav@madhavpramod1

 · 1h

@actorvijay fans removing banner from Kaasi theater.
Says that they had to do so due to certain pressure.

This set alone had cost them 1.2 lakhs.

Pramod Madhav@madhavpramod1

This entire set at Kaasi theater cpsted 3.5 lakhs. Fans are upset but removing them. pic.twitter.com/XAFiCnkuBH

4:54 PM - Nov 8, 2018

Twitter Ads info and privacy

வருத்தம் 
வருத்தத்தில் இருக்கிறார்கள்

 

இவர்கள் வைத்த பேனர்கள் சில பல லட்சம் ரூபாய் மதிப்பு உடையது என்று கூறுகிறார்கள். இரண்டாவது நாளே பேனர்களை இப்படி அகற்ற சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்கிறார்கள் விஜய் ரசிகர்கள். இந்த திடீர் நடவடிக்கை விஜய் ரசிகர்களை வருத்தத்திற்கு உள்ளாக்கி உள்ளது.