சரவணன் மீனாட்சி சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட விபத்து! கணவர் வெளியிட்ட புகைப்படம்!

சரவணன் மீனாட்சி, அரண்மனை கிளி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை காயத்திரி விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கணவர் யுவராஜுடன் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடியதன் மூலம் மிகவும் பிரபலமானவர் காயத்திரி. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவருக்கு பல சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

 

 

குறிப்பாக சரவணன் மீனாட்சி சீரியலில், காயத்திரி செம்ம வில்லியாக நடித்து கலக்கினார். இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆன பின்னரும் இவர் மிகவும் இளமையான நடிகை போல உள்ளதாக இவரை பலர் பாராட்டியும் உள்ளனர்.

இந்நிலையில் இவர் ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்ததாக கூறப்படுகிறது. நடன ரிகசலின் போது ஏற்பட்ட எதிர்ப்பாராத விதமாக அவருக்கு விபத்து காரணமாக அவருக்கு கை எலும்பு முறிந்தது.

 

 

அவருடைய கை மிக மோசமாக அடிபட்டிருக்கும் நிலையில், இந்த விபத்து குறித்து அறிந்து பலர் கயாத்திரியிடம் தொடர்ந்து கேள்விகளை முன்வைத்து வந்தனர். ரசிகர்களின் கேள்விக்கு பதில் கொடுக்கும் வகையில் காயத்ரியின் கணவர் யுவராஜ் தனது மனைவியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு, தற்போது நலமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

 

View this post on Instagram

Happy deewali friends!! Thanks for all your prayers and wishes