விஸ்வாசம் படத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அஜித் :59வது படத்தின் புதிய சூப்பர் அப்டேட்

அஜித்தின் விஸ்வாசம் படப்பிடிப்பு வேலைகள் இந்த ஞாயிற்றுக் கிழமையோடு முடிகிறது என்று கூறுகின்றனர். ஆனால் ஒருசில தகவல்களோ இல்லை ஏற்கெனவே முடிந்தது என்கின்றனர்.

எது எப்படியே படப்பிடிப்பு முடிந்தால் சரி, அடுத்து டீஸர் அப்டேட் எப்போது என்று ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இதற்கு நடுவில் அவரின் அடுத்த பட தகவல்கள் நிறைய சமூக வலைதளங்களில் பரவுகிறது. அதில் ஒன்று தீரன் பட புகழ் வினோத் இயக்கத்தில் மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பில் அஜித்தின் அடுத்த படம் எனப்படுகிறது.

இப்போது அப்படத்தை பற்றி அடுத்த தகவல் என்னவென்றால் போனி கபூருடன் இணைந்து Zee Studios தயாரிக்க இருக்கிறார்களாம். அடுத்தடுத்து ஒரே படத்தை பற்றி வரும் தகவல்கள் உண்மையா என்பதை அஜித் தரப்பு உறுதிப்படுத்தும் வரை காத்திருப்போம்.