பணமதிப்பிழப்பை புகழ்ந்த ரஜினி, கமல்... தில்லாக எதிர்த்த தளபதி விஜய்! #Demonetisation

சென்னை : நவம்பர் 8, 2016ல் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த உயர்ரூபாய் நோட்டுகளான 500 மற்றும் 1000 மதிப்பிழப்பதாக அறிவிக்கப்பட்ட போது நடிகர் ரஜினிகாந்த்,கமல்ஹாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஆனால் விஜய் மட்டுமே தில்லாக பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான கருத்தை தெரிவித்திருந்தார்.

நவம்பர் 8, 2016 இன்றைக்கு போலத் தான் அன்றும் மக்கள் தங்களது அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய நரேந்திர மோடி வெளியிட்ட அறிவிப்பு தான் அடுத்த நாள் முதல் மக்களை தலைபிய்த்துக் கொண்டு ஓடச் செய்தது. கருப்புப் பணத்தை ஒழிக்கும் விதமாக உயர் மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழக்கப்படுவதாக அறிவித்தார்.

அவகாசம் எதுவும் கொடுக்காமல் இது உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் அறிவித்தார். எனவே மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளை மக்கள் வங்கியில் செலுத்திக் கொள்ளலாம் அந்தத் தொகையானது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையின் மூலம் கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணம் வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் வழக்கம் போல இதில் பெரிதும் பாதிக்கப்பட்டது சாமானிய மக்களே.ஏறத்தாழ ஒரு மாதம் ரூபாய் நோட்டிற்கு தட்டுப்பாடு, சில்லரை கிடைக்கவில்லை. ஏடிஎம் வரிசையில் காத்திருந்தாலும் உள்ளே சென்று பணத்தை எடுத்து திரும்பும் வரை திக் திக் என்று த்ரில்லாகவே இருந்தது.

 

புகழ்ந்த ரஜினி 
ரஜினி பாராட்டு

இந்நிலையில் தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து முன்னணி நடிகர்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளினர். நன்றி நரேந்திர மோடி ஜி புதிய இந்தியா பிறந்துள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்தி பதிவிட்டிருந்தார். அப்துல்கலாமின் 2020ல் இந்தியா வல்லரசாகும் கனவை மோடி நிறைவேற்றி வருவதாக நடிகர் சூர்யா பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.

 

வாழ்த்திய முன்னணி நடிகர்கள் 
முன்னணி நடிகர்களின் வாழ்த்து

இந்தியர்கள் இன்று முதல் நிம்மதியாக உறங்குவார்கள் என்று நடிகர் சித்தார்த்தும், மிகவும் பாராட்டத்தக்க ஒரு நகர்வு என்று நடிகர் தனுஷ் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த நடவடிக்கைக்கு பாராட்டுகள் என்று அனிருத்தும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

 

பாராட்டி விட்டு பின் வாங்கிய கமல் 
பின்வாங்கிய கமல்

மோடியின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் கொண்டாடப்பட வேண்டியது, அவரின் செயலுக்கு தலைவணங்குகிறேன் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு பின்னர் மக்கள் படும் இன்னல்களைப் பார்த்து தான் கூறி கருத்தை பின்வாங்கினார்.

 

தில்லாக எதிர்த்த விஜய் 
தைரியமாக எதிர்த்த விஜய்

இந்த நிலையில் இந்தியாவிலேயே முதல்முறையாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அப்பாவி ஏழை மக்கள் பாதித்தது குறித்து என தில்லாக பேசிய ஒரே நடிகர் விஜய் தான். இந்த நடவடிக்கை நாட்டிற்கு தேவைதான் என்றாலும் அதற்கு தகுந்த முன்னேற்பாடுகள் செய்திருக்க வேண்டிய அவசியத்தை விஜய் தனது பேட்டியில் உணர்த்தினார்.

 

சாமானிய மக்கள் பாதிப்பு 
மக்கள் தவிப்பு

பொதுமக்கள் பசிக்கு சாப்பிட முடியாமல், மருந்து, மாத்திரை வாங்க முடியாமல் தவிக்கின்றனர். தினக்கூலியாக ரூ. 500, 1000 வாங்குபவர்கள் அதனை செலவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர். வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்பமுடியாமல் தவிக்கின்றனர். இந்த நடவடிக்கை நாட்டிற்கு தேவைதான் என்றாலும் அதற்கு தகுந்த முன்னேற்பாடுகள் செய்திருக்க வேண்டிய அவசியத்தை விஜய் தனது பேட்டியில் உணர்த்தினார்.

 

Skycinemas@SkycinemasNews

. @actorvijay raise voice against .

Full video : Rise of a Leader https://youtu.be/QRkeslY0JVY 

10:33 AM - Nov 8, 2018

Twitter Ads info and privacy

ட்விட்டரில் ட்ரென்ட் 
ட்ரென்டாகும் விஜய் பேட்டி

 

நடிகர்கள் கமல், ரஜினி உள்ளிட்டோர் ட்விட்டரில் வாழ்த்தி இருந்ததை குறிப்பிட்டும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்த ஒரே நடிகர் விஜய் என்று ட்விட்டரில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 2ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நாளில் விஜயின் 2016ம் ஆண்டின் பேட்டியை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

 

View image on TwitterView image on Twitter

Troll Cinema ( TC )@Troll_Cinema

The Difference!

'No Offence' to Other Actors, it was Their Opinion!

But 's View Always Unique ❤️

9:39 AM - Nov 8, 2018

Twitter Ads info and privacy