ப்பா.. என்னா வில்லத்தனம். 'சண்டக்கோழி 2' வில்லியைப் பார்த்து மிரண்டு போன கீர்த்தி சுரேஷ்!

சென்னை: சண்டக்கோழி 2 படத்தில் வரலட்சுமியின் மிரட்டலான வில்லத்தனமான நடிப்பைப் பார்த்து மிரண்டு போய் விட்டாராம் கீர்த்தி சுரேஷ்.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த சண்டக்கோழி 2 படம் நாளை ரிலீசாகிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வில்லியாக வரலட்சுமி நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வில்லிகளின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்தளவிற்கு வில்லிகளுக்கு பஞ்சம்.

இந்நிலையில், சண்டக்கோழி 2 படத்தின் மூலம் மிரட்டலான வில்லியாகி இருக்கிறார் வரலட்சுமி. ஏற்கனவே சத்யா படத்தில் அவர் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தபோதும், இப்படத்தில் வித்தியாசமான வில்லியாக மிரட்டி இருக்கிறாராம்.

வரலட்சுமியின் கதாபாத்திரம் குறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில், 'படத்தில் கொடூர வில்லியாக வரலட்சுமி மிரட்டி இருக்கிறார். இப்படத்தில் நடித்ததில் இருந்து அவரிடம் பேசவே எனக்கு பயமாக இருக்கிறது. மிரட்டல் என்றால் அப்படி ஒரு மிரட்டல்' எனத் தெரிவித்துள்ளார்.

இப்படம் மட்டுமின்றி, கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள சர்கார் படத்திலும் வரலட்சுமி நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது.