சர்கார் படத்துக்காக கதை திருடினாரா முருகதாஸ்?: விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சனை

சென்னை: சர்கார் திரைப்படத்தின் கதை திருடப்பட்டது என புகார் எழுந்துள்ளது.

சர்கார் திரைப்படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே பிரச்சனை தான். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிகரட் பிடிப்பது போன்ற புகைப்படம் புயலை கிளப்பியது.

இப்போது இசை வெளியீட்டு விழா முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், கதை திருடப்பட்டது என புகார் எழுந்துள்ளது.

ஏஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் திரைப்படம், என்னுடையது என உதவி இயக்குனர் வருண் தேவராஜ் என்பவர் புகார் அளித்துள்ளார். கதையை எழுதி செங்கோல் என்ற பெயரில் எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்ததாகவும், அதை திருடி ஏஆர்.முருகதாஸ் சர்கார் என்ற பெயரில் படமாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு கதைகளுமே 100 சதவிகிதம் பொருந்திப்போவதாக சொல்லப்படுகிறது. அதனால் சர்கார் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது.

இதற்கு முன்பு முருகதாஸ் இயக்கி விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தின் கதையும் திருடி எடுக்கப்பட்டது என புகார் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.