சர்கார் டீசர் மட்டுமில்ல வேற ஒன்னும் வெயிட்டா இருக்கு: ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க விஜய் ஃபேன்ஸ்

சென்னை: அக்டோபர் 19ஆம் தேதி விஜய் ரசிகர்கள் கொண்டாடுவதற்கு மற்றொரு விஷயமும் இருக்கிறது.

விஜய் ரசிகர்கள் பொதுவாகவே கொண்டாட்ட மனநிலை அதிகம் கொண்டவர்கள். இந்த வருடம் அவர்கள் கொண்டாட பல விஷயங்கள் காத்திருக்கின்றன. ஏற்கனவே சர்கார் ஆடியோ கொண்டாட்டத்தில் உள்ளனர்.

அக்டோபர் 19 ஆம் தேதி விஜய் ரசிகர்களுக்கு முக்கியமான நாள். சர்கார் திரைப்படத்தின் டீசர் அன்று வெளியாக உள்ளது.

ஏஆர்.முருகதாஸுடன் விஜய் மூன்றாவது முறையாக கூட்டணி, அரசியல் படம், ஏஆர்.ரஹ்மான் இசை என இப்படத்தின் டீசரை வைரலாக்க பல காரணங்கள் இருக்கின்றன.

அதேபோல் மற்றொரு விஷயம் என்னவென்றால், ஏஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியில் வெளியான கத்தி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது.

2014ம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி தான் விஜய் சமந்தா நடித்த கத்தி படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. விவசாயத்திற்கு ஆதரவாகவும், ஊழலுக்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட்டது. இப்போது சர்கார் ஒரு விரல் புரட்சியை முன்னிலைப்படுத்துகிறது.