மதுவில் போதைப்பொருள் கலந்து கொடுத்து பலாத்காரம் செய்தார்: பிரபல இயக்குனர் மீது பெண் புகார்

மும்பை: பிரபல பாலிவுட் இயக்குனர் சுபாஷ் கை போதைப் பொருள் கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தனுஸ்ரீ தத்தாவின் துணிச்சலை பார்த்து பல பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து வெளிப்படையாக பேசத் துவங்கியுள்ளனர். பாலிவுட்டில் மீ டூ இயக்கம் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனரும், நடிகருமான சுபாஷ் கை மீது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

சுபாஷ் கை

நான் பல ஆண்டுகளுக்கு முன்பு சுபாஷ் கை இயக்கிய படத்தில் பணியாற்றினேன். முதலில் அவர் என்னை மியூசிக் ரெக்கார்டிங்குகளுக்கு அழைத்துச் சென்றார். நள்ளிரவு வரை நான் அங்கு அமர்ந்திருக்க வேண்டியிருந்தது. ரெக்கார்டிங் முடிந்துவிட்டால் ஆட்டோ பிடித்து வீட்டிற்கு செல்வேன் அல்லது சுபாஷ் என்னை டிராப் செய்வார்.

இயக்குனர்

மெதுவாக அவர் என் தொடையில் கை போடத் துவங்கினார். பின்னர் என்னை கட்டிப்பிடித்து நான் அன்றைய தினம் சிறப்பாக வேலை செய்ததாக கூறினார். ஸ்க்ரிப்ட் குறித்த விவாதத்திற்காக லோகந்த்வாலாவில் உள்ள அவரின் அபார்ட்மென்ட்டுக்கு என்னை அழைத்தார். ஸ்க்ரிப்ட் விவாதத்தின்போது நான் மட்டும் தான் அவர் மீது அன்பு வைத்திருப்பதாக கூறினார். அழுவது போன்று நடித்து என் மடியில் தலை வைத்தார்.

பிரச்சனை

அவர் என் மடியில் தலை வைத்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். அதன் பிறகு அவர் எனக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த நான் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டேன். மறுநாள் அவர் அலுவலகத்தில் காதலர்களுக்கு இடையே பிரச்சனை வரத் தான் செய்யும் என்றார். எனக்கு வேறு வேலை இல்லாததால் அந்த வேலையை விட பயந்தேன்.

பலாத்காரம்

ஒரு நாள் மாலை அவர் மது அருந்த முடிவு செய்தார். எனக்கும் மது கொடுத்தார். அதில் அவர் போதைப் பொருளை கலந்துவிட்டார். அதன் பிறகு நான் காரில் ஏறியது நினைவிருந்தது. அவர் என்னை என் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார் என்று நினைத்தேன். ஆனால் அவர் என்னை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று என் உடையை கழற்றினார். நான் கத்த முயன்றபோது வாயில் கையை வைத்துவிட்டார். எனக்கு மயக்கமாகிவிட்டது. அவர் என்னை பலாத்காரம் செய்துவிட்டார்.

வேலை

மறுநாள் தான் என்னை வீட்டில் டிராப் செய்தார். அந்த சம்பவத்திற்கு பிறகு நான் சில நாட்கள் விடுப்பில் இருந்தேன். நான் வேலையை விட்டு போனால் சம்பள பாக்கி கிடைக்காது என்று கூறினார். அதன் பிறகு நான் அவரை பார்க்கவோ, பேசவோ இல்லை. தற்போது தான் அது குறித்து பேச துணிச்சல் வந்தது என்று அந்த பெண் தெரிவித்துள்ளார்.

ஃபேஷன்

அந்த பெண் தெரிவித்துள்ள புகாரை சுபாஷ் கை மறுத்துள்ளார். கடந்த காலத்தில் நடந்தது என்று கூறி ஏதாவது ஒரு கதையை சொல்லி அடுத்தவர்களின் பெயரை கெடுப்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது. அந்த பெண் கூறிய புகாரில் உண்மை இல்லை. நான் பெண்களை மதிப்பவன் என்று சுபாஷ் கை தெவித்துள்ளார்.