நல்ல வேளை நான் அந்த நடிகருடன் அவுட்டோர் ஷூட்டிங் போகவில்லை: நடிகை நிம்மதி

மும்பை: நல்ல வேளை நான் அவரிடம் தனியாக சிக்கவில்லை என்று ஆலோக் நாத் பற்றி நடிகை ரேணுகா சஹானே தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ஆலோக் நாத் மீது பல நடிகைகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். ஒரு பெண் இயக்குனர் ஆலோக் நாத் தன்னை பலாத்காரம் செய்ததாக கூறினார்.

இந்நிலையில் ஆலோக் நாத்துடன் சேர்ந்து நடித்த ரேணுகா சஹானே அவர் பற்றி பேட்டி அளித்துள்ளார். ஆலோக் பற்றி ரேணுகா கூறியதாவது,

ஆலோக் நாத் 
பிரச்சனை இல்லை

நான் ஆலோக் நாத்துடன் நடித்தபோது எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அவருக்கு இரண்டு முகங்கள் இருப்பது குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் ஓவராக குடிப்பார் என்று பலர் கூறியுள்ளனர். அவரின் இரட்டை முகம் சினிமா துறையில் உள்ளவர்களுக்கு தெரியும். ஹம் ஆப் கே ஹை கோன் படம் மற்றும் இம்திஹான் சீரியலில் அவருடன் நடித்து முடித்த பிறகு அவர் பற்றி நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டேன்.

 

நல்ல வேளை 
ரேணுகா

நல்ல வேளை நான் அவுட்டோர் ஷூட்டங்கில் அவருடன் கலந்து கொள்ளவில்லை. 90களில் 9 மலபார் ஹில்லில் நடித்தபோது தீபிகா தேஷ்பாண்டே ஆலோக் நாத் பற்றி கூறினார். 17 அல்லது 18 வயது நடிகைகள் இருவரும் ஆலோக் நாத் பார்ட்டிகளில் தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக என்னிடம் கூறியுள்ளனர்.

குடிபோதை 
வின்டா

குடித்துவிட்டால் ஆலோக் நாத்தை கட்டுப்படுத்த முடியாதாம். அதனால் அவரிடம் இருந்து தள்ளி இருக்கு வேண்டும் என்று நடிகைகள் தெரிவித்துள்ளனர். வின்டாவுக்கு நடந்தது மோசமானது. ஆலோக் நாத்தால் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். ஆனால் அவர்கள் வெளிப்படையாக சொல்ல முன் வரவில்லை.

 

பகல் 
இரவு

நடிகரும், இயக்குனருமான தேவன் போஜானி கூறுகையில், வின்டா நந்தாவின் தாரா சீரியலில் நானும் நடித்தேன். நான் தாரா மகள் தேவயாணியின் நண்பராக நடித்தேன். எனக்கு ஆலோக் நாத்துடன் சேர்ந்து எந்த காட்சியும் இல்லை. ஆனால் அவர் பகல் நேரத்தில் நல்லவராகவும், இரவாகிவிட்டால் அப்படியே வேறு ஆளாகவும் மாறிவிடுவார் என்று பலர் கூறி கேள்விப்பட்டிருக்கிறேன் என்றார்.