பிக் பாஸ் வீட்டிலிருந்து வந்ததில் இருந்து ஐஸ் எதுக்கு காத்திருந்தாரோ... அது நடந்துடுச்சாம்!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் கிடைத்த தனது தோழி யாஷிகாவை மீண்டும் சந்தித்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் ரன்னர் அப் ஆக வந்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. பெங்காலிப் பெண்ணான இவருக்கு பிக் பாஸ் வீட்டில் கிடைத்த உடன்பிறவாத் தோழி நடிகை யாஷிகா ஆனந்த்.

இறுதிச் சுற்றிற்கு முந்தைய வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் யாஷிகா.

பிக் பாஸ் வீட்டில் நுழைந்தது முதல் யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் தோழிகளாயினர். சுமார் 90 நாட்களுக்கும் அதிகமாக பிக் பாஸ் வீட்டில் கழித்த அவர்கள், அடிக்கடி தங்களை சோல் சிஸ்டர்ஸ் என்றே அழைத்துக் கொண்டனர்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் சென்ற பிறகும் தங்களது நட்பு தொடரும் என அவர்கள் இருவருமே தெரிவித்திருந்தனர். அதன்படி தற்போது இருவரும் மீண்டும் சந்தித்துள்ளனர்.

இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா. மேலும் அதில், "எந்த சந்திப்பிற்காக காத்திருந்தேனோ அது நடந்து விட்டது" என மகிழ்வுடன் தெரிவித்துள்ளார் ஐஸ்.

ஐஸ்வர்யாவின் இந்தப் பதிவை சுமார் 42 ஆயிரம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர். பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன் ஐஸ்வர்யாவின் பதிவுகளுக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்ற அளவில் மட்டுமே லைக்ஸ் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. அவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் எத்தனையோ சர்ச்சைகளில் சிக்கியபோதும், ஐஸ்வர்யாவிற்கு ஆதரவாகவே யாஷிகா இருந்தார். சிறந்த நட்பிற்கு உதாரணமாய் அவர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.