அஜித் மற்றும் அஜித் ரசிகர்கள் பெருமையடைந்த அந்த தருணம்: வைரலாகும் புதிய போட்டோ

சென்னை: ஆளில்லா விமானத்திற்காக யூஏவி சான்றிதழைப் பெற்றுள்ளார் அஜித்.

விருது வழங்கும் விழா என்றால் விருந்துக்குப் போவதுபோல் தயாராகும் நடிகர்களுக்கு மத்தியில் சற்று வித்தியாசமானவர் நடிகர் அஜித். நடிப்பது என் தொழில், அதை புரமோட் செய்யவோ அதற்காக பாராட்டுக்களைப் பெற படியேறவோ மாட்டேன் என குறிக்கோளுடன் இருக்கிறார்.

பொதுவாக ஊடக வெளிச்சத்திலிருந்து விலகி இருக்கும் அஜித், எம்.ஐ.டி மாணவர்களின் ஆளில்லா விமானம் தயாரிக்கும் முயற்சிக்கு கைகொடுத்து ஆலோசித்தார். இப்போது அந்த தகபஷா ட்ரோன் வெற்றியின் அங்கீகாரத்தை பெருமையோடு கையில் ஏந்தி காட்சியளிக்கிறார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லேண்ட் மாகாணத்தில் நடைபெற்ற யூஏவி சேலஞ்ச் இறுதிப்போட்டியில் அஜித் ஆலோசனைப்படி தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானம் பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு இரண்டாம் இடம் பிடித்தது.

அந்த நிகழ்வில் அஜித் கலந்துகொள்ளவில்லை. தற்போது இரண்டாமிடம் பிடித்ததற்கான யூஏவி சான்றிதழுடன் போஸ் கொடுத்திருக்கிறார் அஜித். அந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.