விஜய்யின் பேச்சால் அப்செட் ஆனாரா கலாநிதி மாறன்?

சென்னை: சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய விஷயங்களால் கலாநிதி மாறன் அப்செட் ஆனதாகக் கூறப்படுகிறது.

சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய பல விஷயங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அரசியல் குறித்த கருத்துகள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டன.

அவருடைய பேச்சுக்கு சில அரசியல் பிரமுகர்களிடமிருந்து எதிர்ப்புகளும் வந்தன. இந்த நிலையில் மேடையில் விஜய் பேசிய விஷயங்களினால் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அப்செட் ஆனதாகக் கூறப்படுகிறது.

விஜய் தனது படத்தைத் தாண்டி பேசிய விஷயங்கள் கலாநிதி மாறனுக்கு முன்கூட்டியே தெரியாதாம். அது முருகதாஸும் விஜய்யும் சேர்ந்து திட்டமிட்டுப் பேசியது என்கின்றனர்.

அதனால் இருவர் மீதும் கலாநிதி மாறன் அப்செட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இதுபோன்ற நிகழ்வுகள் ரஜினியின் 'பேட்ட' பாடல் வெளியீட்டு விழாவில் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக உள்ளாரா

சர்கார் நிகழ்ச்சி முழுவதுமே கலாநிதிமாறன் எந்த ரியாகபஷனும் கொடுக்காமல் தான் இருந்தார். விஜய் பேசும்போதுதான் அவருக்கு உற்சாகமும் சிரிப்பும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.விஜய் பேசியதில் அவருக்கு மகிழ்ச்சி தானாம், ஆனால் அவர் விஜய்யை தளபதி என்று அழைத்ததில் பெரிய இடத்துக்காரர் தான் அப்செட்டாம்.