நடிகர் ஒருவர் மேலே விழுந்து தொல்லை கொடுத்தார்: அனேகன் ஹீரோயின் புகார், யார் அவர்?

சென்னை: நடிகர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை அமிரா தஸ்தூர் தெரிவித்துள்ளார்.

தனுஷின் அனேகன் படம் மூலம் கோலிவுட் வந்தவர் இந்தி நடிகையான அமிரா தஸ்தூர். சந்தானத்தின் ஓடி ஓடி உழைக்கணும் படத்தின் ஹீரோயின் அவர் தான்.

இந்நிலையில் பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார் அமிரா. இது பற்றி அவர் கூறியதாவது,தொல்லை

பட வாய்ப்புக்காக யாரும் என்னை படுக்கைக்கு அழைக்கவில்லை. ஆனால் பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரையுலகில் ஆண்கள் மற்றும் பெண்களால் தொல்லைக்கு ஆளானேன். அவர்களின் பெயர்களை சொல்ல எனக்கு தைரியம் இல்லை. அவர்கள் அதிகாரம் படைத்தவர்கள். இருப்பினும் ஒரு நாள் நிச்சயம் நான் அவர்களின் பெயர்களை வெளியிடுவேன்.

கர்மா

தற்போது அந்த அதிகாரம் படைத்தவர்களின் பெயர்களை வெளியிடுவது எனக்கு பாதுகாப்பு இல்லை. அதனால் அவர்கள் யார் என்பதை கூற மாட்டேன். என்ன செய்கிறோம் என்பதை தெரிந்து தான் அவர்கள் செய்கிறார்கள். அவர்கள் தங்களின் அந்த காரியங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். மாற்ற அலை வந்து கொண்டிருக்கிறது. கர்மாவில் இருந்து அவர்களை அவர்களின் ஸ்டேட்டஸ் காப்பாற்றாது.

அட்டகாசம்

பாடலை காட்சியாக்கியபோது ஒரு நடிகர் என் மீது உரசிக் கொண்டு இந்த படத்தில் நீங்கள் நடிப்பது மகிழ்ச்சி என்று காதில் சொன்னார். நான் அவரை தள்ளிவிட்டுவிட்டு மீண்டும் பேச மறுத்தேன். அதில் இருந்து அவர் என்னை கஷ்டப்படுத்தினார். இதை எல்லாம் பெரிதுபடுத்தக் கூடாது என்று இயக்குனர் கூறினார்.

தயாரிப்பாளர்

என்னை சீக்கிரமே செட்டுக்கு வரச் சொன்னார்கள். என் ஷாட்டுக்காக மணிக்கணக்கில் காக்க வைத்தார்கள். 18 மணிநேரம் வேலை பார்க்க வைத்தார்கள். 4- 5 மணிநேரம் நான் தூங்கினால் அது பெரிய விஷயம். இறுதியில் அந்த நடிகரிடம் என்னை மன்னிப்பு கேட்க வைத்தார் தயாரிப்பாளர். மற்றொரு படப்பிடிப்பில் இயக்குனர் தினமும் என்னை திட்டினார்.

படப்பிடிப்பு

இயக்குனர் ஒருவர் செட்டில் வைத்து தினமும் என்னை திட்டினார், கத்தினார். சீக்கிரமாக செட்டுக்கு வரவழைத்து கேரவனில் காக்க வைத்தார். 12, 13 மணிநேரம் கழித்து உதவி இயக்குனரை அனுப்பி இன்று உங்களுக்கு ஷாட் கிடையாது என்பார். அவர் படத்தில் நடிக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றார் என அமிரா தஸ்தூர் தெரிவித்துள்ளார்.