இந்த மாதிரி வேறு யாருக்கும் நடக்க கூடாது :ரகுவரன் மரணத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள் !! மனைவி ரோகினி

நாயகன், வில்லன் என்று தொடக்கத்தில் மாறி மாறிப் பயணித்த ரகுவரன் நடித்து 1986-ல் வெளியான படம் மந்திரப் புன்னகை. வில்லனாக நடித்து நாயகன் அந்தஸ்து பெற்ற சத்யராஜ் நடித்த இந்தப் படத்தில் வில்லனாக நடித்தார் ரகுவரன். இப்படி ஆச்சரியகரமான பல முரண்களைக் கொண்டது ரகுவரனின் திரைப்பயணம்.அதுவரை தமிழ் சினிமாவில் வில்லன் வேடங்கள் என்றாலே பெரும்பாலும் தன் புஜபலம் காட்டும். காது கிழியும் அளவுக்குக் கத்திப் பேசி, கூலிப்படை திரளாகக் கையில் மிரட்டும் ஆயுதங்களோடு திரையைக் கிழித்துக்கொண்டு மிரட்டும்.ஆனால் அளவாகவும் தேவைப்படும் இடங்களில் மிகையாகவும், கூர்மையான பார்வையை முன்னிறுத்தி வசன உச்சரிப்பிலும் சிரிப்பிலும் எதிர்மறைப் பாத்திரத்தின் நோக்கத்தைப் புதிய வடிவத்துக்குள் வார்த்துக் கொடுத்தார் ரகுவரன்.

கிழிந்து தொங்கும் கிளிஷேவாகிவிட்ட வில்லன் கதாபாத்திரங்களுக்குப் புதிய அடையாளம் கிடைத்தது. இப்படி இளம் கிளாசிக் வில்லனாக நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் கதையின் நாயகனாகப் பொருந்திக் காட்டிய நடிகராகவும் இருந்த ரகுவரனைக் குறைத்து மதிப்பிட முடியாது.இயக்குநர் ஆர்.சி சக்தியின் ‘கூட்டுப் புழுக்கள்’ படத்தில் வேலையில்லா ஒரு நடுத்தர வர்க்க இளைஞனின் இயலாமை, கோபம், ஏக்கம், கையறுநிலை, காதல் ஆகிய நுண்ணுணர்வுகளை ரகுவரன் தனது உடல்மொழியின் வழியாக வெளிப்படுத்திய விதம் கதாபாத்திரத்துக்கு மிகவும் நேர்மையாகவும் நெருக்கமாகவும் இருக்கும்.ஒரு கட்டத்தில் வில்லன் கதாபாத்திரங்களிலிருந்து விலகியும் விலகாமலும் முழுநீளக் குணசித்திரக் கதாபாத்திரங்களில் அதிக ஆர்வம் காட்டியபோது அவருக்குப் போதும் போதும் என்கிற அளவுக்கு வாய்ப்புகள் குவிந்தன.

சம்சாரம் அது மின்சாரம், லவ் டுடே, முதல்வன் என்று இடைவெளியின்றி தனது ஆளுமையை வெளிப்படுத்தி வந்த ரகுவரன், தென்னிந்திய மொழிகளைத் தாண்டி இந்திப்பட உலகிலும் கால் பதித்தார். ராஜீவ்மேனன் இயக்கத்தில் வெளியான ‘கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன்’ திரைப்படத்தில் ஒரு ஐடி நிறுவனத்தில் உயரதிகாரியாக வருவார்.கடந்த 1996 ஆம் ஆண்டு, நடிகை ரோகினியைத் திருமணம் செய்து கொண்ட ரகுவரன், 2004 ஆம் ஆண்டு அவரிடமிருந்து பிரிந்து, விவாகரத்தும் செய்து கொண்டார். இவர்களுக்கு ரிஷி என்ற மகனும் உள்ளார்.குடி பழக்கத்துக்கு அடிமையான நடிகர் ரகுவரன், 2008 ஆம் ஆண்டு உடலுறுப்பு செயலிழந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், நடிகை ரோகினி ரகுவரனின் மரணத்தின் அவர் அனுபவித்த துன்பங்களை பேட்டி ஒன்றில் விவரித்துள்ளார்.

இதில், ‘ரகுவரன் மரணத்தின் போது பத்திரிகையாளர்கள் யாரும், வீட்டின் உள் வந்து புகைப்படம் எடுக்கவேண்டாம் என்றேன்.எல்லோரும் சரி என்றார்கள், ஆனால், நான் என் மகனை அழைத்து வந்த போது அனைவரும் உள்ளே வந்துவிட்டார்கள்.உண்மையாகவே எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, அதை தொடர்ந்து சில வருடங்கள் நான் எந்த பத்திரிகையிலும் பேசவில்லை.அந்த நேரத்தில் கூட தனிமை இல்லையென்றால் என்ன செய்வது, இனி எந்த ஒரு இடத்திலும் இப்படி நடக்கக்கூடாது ’ என்று ரோகினி கூறியுள்ளார்.