சின்மயிக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன்? நாங்கள் உன்னோடு இருப்போம் என உறுதி

தமிழ்கூறும் நல்லுலகின் இன்றைய சர்ச்சை நாயகியாக தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவது பாடகி சின்மயிக்கு இது முதல் அனுபவமல்ல. சுமார் 6 வருடங்களுக்கு முன் பிளாக்கர்கள் என்று ஒரு இனம் கொடிகட்டிப் பறந்தபோது அவர்களோடு வம்பிழுத்து பலரை உள்ளே தள்ளிய அனுபவமும் அவருக்கு உள்ளது. அப்படி கைது செய்யப்பட்டவர்களுல் சில பத்திரிகையாளர்களும் அடக்கம்.

இப்போது போலவே, உண்மையா அல்லது கதையா என்று தெரியாமல் சின்மயியை சப்போர்ட் பண்ணியவர்கள் ஏராளம்.

இதைத்தான் காலக்கொடுமை என்று சொல்வார்கள். அந்த சப்போர்ட்டர்கள் லிஸ்டில் வைரமுத்துவின் மகர் மதன் கார்க்கியும் ஒருவர்.

 

 

தனது மனைவி நந்தினியயை சப்போர்ட்டுக்கு வைத்துக்கொண்டு 2012 மார்ச்சில் சின்மயிக்கு ஆதரவாக அவர் போட்ட ட்விட்டில்.'சின்மயி உங்கள் தைரியத்தை மெச்சுகிறேன். சரியான காரியத்தில் இறங்கியிருக்கிறீர்கள். நாங்கள் உங்களோடு இருக்கிறோம்' என்று ட்விட்டியிருக்கிறார்.

இப்போதைய சின்மயி விவகாரத்திலும் மதன் கார்க்கியிடமிருந்து சின்மயிக்கு ஆதரவான ட்விட் ஒன்றை எதிர்பார்க்கலாமா?