'ஒ****ல'... செய்தியாளர் சந்திப்பில் கெட்டவார்த்தை பேசி அதிர வைத்த 'வடசென்னை' நடிகர்!

சென்னை: வடசென்னை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் பவன் கெட்டவார்த்தை பேசியது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துள்ள படம் வட சென்னை. இப்படத்திற்கு தணிக்கை வாரியம் 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனையடுத்து இப்படம் வரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், இப்படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, உணர்ச்சிவசப்பட்டு பேசிய நடிகர் பவன், தொடர்ந்து கெட்ட வார்த்தைகளை கூறினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, "வடசென்னை படத்திற்கு சென்சார் ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். இப்படம் வடசென்னை மக்களைப் பற்றிய வாழ்வியல் படம் என்பதால், சில இடங்களில் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்துவதை தவிர்க்க இயலவில்லை. அதை சென்சார் போர்டு கட் செய்யாமல் அப்படியே வைத்ததற்கு மிகவும் நன்றி. படத்தைப் பார்க்கும் போது அப்படி சூப்பராக இருந்தது" என்றார்.

இந்தப் பேச்சின் இடையிடையே பவன் சில கெட்ட வார்த்தைகளைப் பேசியது படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்தது.