தனுஷின் ஏக்கத்தை தீர்த்து வைப்பாரா ரஜினி?

சென்னை: தனுஷின் ஏக்கத்தை தீர்த்து வைப்பாரா ரஜினி என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வட சென்னை படம் வரும் 17ம் தேதி ரிலீஸாக உள்ளது. படத்தை தனுஷ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.

தனுஷ் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இது அமையும் என்று நம்பப்படுகிறது.

ரஜினி 
ஆசை

திரையுலகில் உள்ளவர்கள் மற்றும் புதிதாக வருபவர்களுக்கு ரஜினிகாந்துடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அந்த ஆசை அவரின் மருமகன் தனுஷுக்கு மட்டும் இருக்காதா என்ன?. மாமா ரஜினியுடன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது என்று அவர் பல முறை வாய்விட்டு கூறிவிட்டார்.

வட சென்னை 
தனுஷ்

வட சென்னை படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது ரஜினியை இயக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் தனுஷ். ரஜினியை இயக்கும் பாக்கியம் கிடைத்தால் அதை கடவுளின் ஆசிர்வாதமாக நினைப்பேன் என்று தனுஷ் தெரிவித்துள்ளார். இதற்கு ரஜினி தான் பதில் அளிக்க வேண்டும்.

 

நடிப்பு 
வேண்டாம்

ரஜினி நடித்த காலா படத்தை தயாரித்தார் தனுஷ் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்பட்டார் அவர். ஆனால் ரஜினியோ தனுஷ் நடிக்க வேண்டாம், தயாரிப்போடு நிறுத்திக் கொள்ளட்டும் என்று கூறியதாக தகவல் வெளியானது. இத்தனைக்கும் ரஜினி கேட்டு தான் தனுஷ் அந்த படத்தை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சம்மதம் 
சம்மதம் நடக்குமா?

தன் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்கவே ரஜினி அனுமதிக்கவில்லை. இந்நிலையில் அவர் தனுஷ் இயக்கத்தில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தனுஷ் திறமையான நடிகர் மட்டும் அல்ல இயக்குனரும் கூட. அதற்கு அவர் இயக்கிய முதல் படமான ப. பாண்டி தான் சாட்சி. ரஜினி சம்மதம் தெரிவித்தால் நிச்சயம் தனுஷ் ஒரு வித்தியாசமான கதையை தயார் செய்து ஹிட் கொடுப்பார் என்று நம்பலாம்.