எலும்பும் தோலுமாக இருக்கும் நடிகை: காரணம் பிரச்சனை அல்ல, ஆசை

சென்னை: நடிகை ஒருவர் உடல் எடையை குறைத்து பார்க்க எலும்பும் தோலுமாக உள்ளார்.

அண்டை மாநிலத்தில் இருந்து வந்து கோலிவுட்டில் ஒரு இடத்தை பிடித்துள்ளவர் அந்த நடிகை. அவர் ஏற்கனவே ஒல்லியாகத் தான் இருப்பார். தனிப்பட்ட வாழ்க்கையில் சில, பல பிரச்சனைகள் எல்லாம் நடந்து தற்போது தான் நிலைமை சீராகியுள்ளது.

இதையடுத்து அவர் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

மார்க்கெட் 
டல்

அந்த நடிகை கவனம் செலுத்தி வரும் தமிழ், மலையாள திரையுலகில் அவரின் மார்க்கெட் லைட்டாக டல்லடிக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில் அவருக்கு பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாலிவுட்டில் பெரிய ரவுண்டு வர ஆசைப்படுகிறார் அம்மணி. அதற்கான வேலையிலும் அவர் இறங்கிவிட்டார்.

 

உடல் எடை 
ஒல்லிக்குச்சி

நடிகைகள் ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாக இருந்தால் தான் பாலிவுட் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பது நடிகைக்கு தெரியாதா என்ன? அதனால் ஏற்கனவே ஒல்லியாக இருந்த அவர் தனது உடல் எடையை மேலும் குறைத்து எலும்பும் தோலுமாக உள்ளார். ஸ்லிம்மாகுகிறேன் என்ற பெயரில் அவர் செய்த காரியம் அவரின் அழகையே கெடுத்துள்ளது.

 

அதிர்ச்சி 
எலும்புக்கூடு

தற்போது நடிகையை பார்ப்பவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். அந்த அளவுக்கு எலும்புக்கூடு போன்று இருக்கிறார். அவரை பார்த்தாலே சாப்பாட்டை பார்த்து பல நாட்கள் ஆனவர் போன்று இருக்கிறார். ஒல்லியாக வேண்டியது தான் அதற்காக இப்படியா?. இப்படி எலும்புக்கூடு போன்று இருந்தால் ரசிகர்களுக்கு பிடிக்குமா என்பதை நடிகை யோசிக்க வேண்டும்.

 

கவர்ச்சி 
புகைப்படங்கள்

பாலிவுட் வாய்ப்பு கிடைத்த கையோடு ரொம்பவே தாராளமாக கவர்ச்சி காட்டி புகைப்படங்கள் எடுத்து இந்தி இயக்குனர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார் நடிகை. இப்படி நடிகைகளிடம் இயக்குனர்கள் கவர்ச்சி புகைப்படங்கள் வாங்கி தங்களின் லேப்டாப்புகளில் பத்திரமாக வைத்து என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை என்று பிரபல பாலிவுட் ஹீரோ ஒருவர் தெரிவித்துள்ளார். இப்படி வில்லங்கம் இருப்பது தெரியாமல் நடிகை கவர்ச்சிக் கடலில் மிதக்கிறார். பத்திரமாக இருந்தால் சரி.