வடிவேலு இனி நடிக்க தடை? ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் வடிவேலு நடிப்பில் மிக பிரம்மாண்ட வெற்றி பெற்ற இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களிலேயே நின்றுவிட்டது.

பல கோடி செலவு செய்து செட் போடப்பட்டுள்ளது. வடிவேலு தொடர்ந்து நடிக்காததால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என தயாரிப்பாளர் இயக்குனர் ஷங்கர் புகார் அளித்தார்.

அதற்கு தயாரிப்பாளர் சங்கம் நீண்ட நாட்களாக வடிவேலு தரப்பில் இருந்து விளக்கம் கேட்டுவந்தது. பின்னர் படத்துக்கு செலவழித்த 9 கோடி ரூபாயை வடிவேலு அளிக்க வேண்டும் என்று கூறினர்.

அதற்கு தற்போதுவரை வடிவேலு எந்த பதிலும் கொடுக்காததால் வடிவேலுவை வைத்து இனி எந்த தயாரிப்பாளரும் படம் எடுக்கக்கூடாது என ரெட் போட்டுள்ளது தயாரிப்பாளர் சங்கம்.