மனோபாலா மீது அரவிந்த் ஸ்வாமி போட்ட வழக்கு

நடிகர் அரவிந்த் சாமி தனி ஒருவன் படத்திற்கு பிறகு முன்னணி இடத்துக்குவந்துவிட்டார். செக்க சிவந்த வானம் உட்பட பல படங்கள் அவர் கைவசம் உள்ளன.

அவர் நடித்திருந்த மற்றொரு படம் சதுரங்க வேட்டை 2 ஷூட்டிங் முடிந்த நிலையில் டப்பிங் உள்ளிட்ட பணிகள் முடியாமல் அப்படியே நிற்கிறது.

அந்த படத்தை தயாரித்துவரும் நடிகர் மனோபாலா அரவிந்த் சாமிக்கு தரவேண்டிய 1.78 கோடி ருபாய் சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுபற்றி கோர்ட் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அரவிந்த் சாமி சட்டப்பூர்வ நடவடிக்கையில் இறங்கியுள்ளதால் சதுரங்கவேட்டை 2 வெளிவருமா என்பது பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.