கே.வி.ஆனந்த் படத்தில் சூர்யா, மோகன்லால் கதாபாத்திரம் கசிந்தது

சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக சாயிஷா நடிக்க, மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடக்க, இதில் சூர்யா ஆர்மி மேனாக நடிக்கின்றார் என்று ஒரு தகவல் கசிந்துள்ளது.

மேலும், மோகன்லால் அரசியல்வாதியாக வருகின்றார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது, இப்படத்தை அடுத்த வருட தொடக்கத்தில் திரைக்கு கொண்டு வர முயற்சிகள் செய்து வருகின்றனர்.