பாலிவுட்டில் ஜோக்கர் படம் ரீமேக், ஹீரோ இவரா? உறுதியான கூட்டணி

பாலிவுட் திரையுலகம் தற்போதெல்லாம் தென்னிந்தியாவை உற்று கவனித்து வருகின்றது. அந்த வகையில் ராஜுமுருகன் இயக்கிய ஜோக்கர் படத்தின் மீது தற்போது பாலிவுட் கவனம் திரும்பியுள்ளது.

இப்படம் தேசிய விருதெல்லாம் வென்றது, அமீர்கான் கூட இந்த படத்தின் ரீமேக்கில் நடிப்பதாக ஒரு செய்தி கசிந்தது. ஆனால், உண்மை அது இல்லை.

ஜோக்கர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நவாஸுதின் சித்திக் நடிக்க முன்வந்துள்ளாராம், ராஜுமுருகனே இப்படத்தை அங்கே இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், ராஜுமுருகன் தற்போது ஜிப்சி படத்தை எடுத்து வருவதால், அடுத்த ஆண்டு தான் இந்த கூட்டணி இணையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.