ஜோதிகாவின் அடுத்த படம் இதுவா?

ஒரு காலத்தில் பல ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் jothika. இவரது நடிப்பு திறமையால் பல படங்களில் பாராட்டை வாங்கியவர்.

நன்றாக நடித்து வந்த நிலையில் நடிகர் சூர்யாவை திருமணம் செய்து சினிமாவுக்கு முழுக்கு போட்டார். அவ்வளவு தான் இதோடு சினிமாவுக்கு வரமாட்டார் என நினைத்திருந்த நேரத்தில் 36 வயதினலே படத்தின் மூலம் திரும்ப வந்தார்.

சூர்யா தான் இந்த படத்தை தயாரித்து மறுபடியும் ஜோதிகாவுக்கு ரீஎண்ட்ரி வழங்கினார். தற்சமயம் ராதாமோகனின் காற்றின் மொழி படத்தில் நடித்துள்ள ஜோதிகா, அடுத்ததாக அறிமுக இயக்குனரின் படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

சூர்யாவின் NGKயை தயாரிக்கும் Dream Warrior Pictures தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது. அடுத்த மாதம் தொடங்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பைப் தொடர்ந்து படத்தின் தலைப்பு, மற்ற கதாப்பாத்திரங்கள் அறிவிக்கப்படுமாம்.