விசுவாசம் பாடலை கேட்டு அதிர்ந்த தல! இமான் ஐ என்ன செய்தார் தெரியுமா?

விஸ்வாசமான ரசிகர்களுக்கு வரும் பொங்கலுக்கு அஜித் கொடுக்கப்போவது விஸ்வாசம் படம். அஜித் ரசிகர்களுக்கு தலயை திரையில் பார்த்தால் போதும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள்.

மற்றவர்கள் கதை எப்படி, மாஸாக இருக்குமா, அஜித்-சிவா கூட்டணியின் இந்த 4வது படம் வெற்றி படமாக இருக்குமா என்று இப்போதே கணக்கு போட ஆரம்பித்துவிட்டனர்.

படத்தை பற்றி படக்குழு யாரும் அவ்வளவாக பேசுவதில்லை. இப்போது டி.இமான் விஸ்வாசம் படம் குறித்து ஒரு குட்டி தகவல் மட்டும் பேசியுள்ளார்.

அதாவது படத்தில் இடம்பெற்ற புதிய பாடலை கேட்டுவிட்டு அஜித் ஒன்றுமே பேசவில்லையாம். அதற்கு பதில் இமானை கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளாராம்.