விஜயை பற்றி சிவகார்த்திகேயன் என்ன சொன்னார் தெரியுமா?

சிவகார்த்திகேயன் இப்போது தமிழ் சினிமாவில் சாதித்து வரும் ஒரு இளம் நடிகர். அடுத்து இவரது நடிப்பில் சீமராஜா என்ற படம் நாளை வெளியாக இருக்கிறது, படத்திற்கும் மக்களிடம் நல்ல எதிர்ப்பார்ப்பு உள்ளது.

சீமராஜா படத்திற்காக புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், விஜய் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், விஜய் அவர்கள் பெரிய நடிகர், மேடையில் சும்மா எதையும் சொல்ல மாட்டார்கள், அந்த மேடையில் குழந்தைகளை பிடித்துவிட்டீர்கள் என்று சொன்னது பெரிய விஷயம்.

இப்போது பார்க்கும் போது கூட செமயா ஆடுகிறீர்கள் என்றார், நான் சார் சும்மா சொல்லாதீர்கள் என்றேன். அவ்வளவு பெரிய நடிகர் அவர் நடனத்தை ரசிக்காதவர்கள் இல்லை, அவர் என் நடனத்தை சொல்லும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றார்