அஜித் படத்தை பார்த்து அசந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா?

அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர். இவர் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தை முடித்து இவர் வினோத் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகின்றது, மேலும், இயக்குனர் விஷ்ணுவர்தனும் ஒரு பாலிவுட் படத்தை முடித்துவிட்டு அஜித்துடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் விஷ்ணுவர்தன் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘ஷாருக் சார் நடித்த அசோகா படத்தில் நான் உதவி இயக்குனராக பணியாற்றினேன்.

அதே படத்தில் அஜித்தும் நடித்தார், அப்போதிலிருந்தே எங்களுக்குள் நட்பு இருந்து வந்தது, ஆரம்பம் படம் முடிந்து ஒரு நாள் ஷாருக்கானிடம் ட்ரைலரை போட்டு காண்பித்தேன்.

அவர் மிகவும் சந்தோஷமாக மனம் திறந்து என்னை பாராட்டினார், மேலும், அஜித் சாரை புகழ்ந்து தள்ளினார்’ என்று விஷ்ணு கூறியுள்ளார்.