இப்படி ஒரு பழம் இருப்பது ராதிகா சொல்லித் தான் நமக்கு தெரியுது உங்களுக்கு தெரியுமா

சென்னை: ராதிகா சரத்குமார் ட்விட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சின்னத் திரையின் முடிசூடா ராணியாக இருப்பவர் ராதிகா சரத்குமார். வாணி ராணி சீரியலில் நடித்து வரும் அவரை பலரும் வாணிமா, ராணிமா என்று அன்போடு அழைக்கிறார்கள்.

சீரியல் பார்க்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட ராதிகாவின் சீரியலை தவறாமல் பார்க்கிறார்கள்.

ட்விட்டர் 
ராதிகா

ராதிகா சரத்குமார் ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதுடன் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

 

கொய்யாப்பழம் 
முதல் முறை

ராதிகா ரோஸ் கலரில் இருக்கும் கொய்யாப்பழத்தை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். முதல் முறையாக ரோஸ் கலர் கொய்யாப்பழம் சாப்பிடுவதாக தெரிவித்துள்ளார்.


வாவ் 
சூப்பர்

ராதிகா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்தால் அந்த கொய்யாப்பழத்தை உடனே சாப்பிட வேண்டும் போன்று இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சிலரோ எங்கு வாங்கினீர்கள் என்று கேட்டுள்ளனர்.


வேண்டாம் 
நல்லது இல்லை

வேண்டாம் வாணிமா, ரோஸ் கலர் கொய்யாப்பழத்தை சாப்பிடாதீர்கள். அதனால் பக்க விளைவுகள் அதிகம் என்று சிலர் எச்சரித்துள்ளனர். அமேசானில் இந்த கொய்யாப்பழம் கிடைப்பதாக சில ரசிகர்கள் பதில் அளித்துள்ளனர்.

 

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ