நான் ஒன்றும் சங்கி இல்லை மைக் வைக்காத குறையாக அலறும் நடிகை

திருவனந்தபுரம்: நான் ஒன்றும் சங்கி இல்லை என்று நடிகை அனுஸ்ரீ தெரிவித்துள்ளார்.

பிரபல மலையாள நடிகை அனுஸ்ரீ. மோகன்லால், ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோரின் படங்களில் நடித்துள்ளார். தற்போதும் பிசியாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அவரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

விமர்சனம்

அனுஸ்ரீயை சங்கி சங்கி என்று கூறி நேரிலும், சமூக வலைதளங்களிலும் மக்கள் அவரை விமர்சிக்கிறார்கள், வெறுப்பை காட்டுகிறார்கள். இதையடுத்து இது குறித்து அனுஸ்ரீ விளக்கம் அளித்துள்ளார்.

கட்சி

நான் எந்த கட்சியிலும் இல்லை. குழந்தையாக இருந்ததில் இருந்தே நான் பாலகோகுலத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். என் வீடு கோவிலுக்கு அருகில் உள்ளது. அதனால் அங்கு நடக்கும் கொண்டாட்டங்களில் எல்லாம் கலந்து கொள்வேன் என்கிறார் அனுஸ்ரீ.

பெண்

நான் கோவில் கொண்டாட்டங்களில் வேஷம் போட்டு கலந்து கொள்வதால் என்னை சங்கி என்கிறார்கள். நான் ஒன்றும் சங்கி இல்லை. தேவாலயத்திற்கு அருகில் வசித்தால் அவர்களின் கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்வேன் என்று அனுஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இஃப்தார்

என் கிறிஸ்தவ நண்பர்களுடன் சேர்ந்து ஈஸ்டர், கிறிஸ்துமஸ் கொண்டாடுவேன். ரமலான் மாதத்தில் இஃப்தார் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கிறேன். அப்படி இருக்கும்போது என்னை சங்கி என்று எப்படி சொல்லலாம்? என்று கேட்கிறார் அனுஸ்ரீ.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ