ஏன் இன்னும் இவரை நம்ம படத்தில் கமிட் செய்யவில்லை இயக்குனரிடம் அஜித் கேட்டது யாரை தெரியுமா

அஜித்-சிவா கூட்டணியில் நான்காவது முறையாக விசுவாசம் படம் தொடங்க இருப்பது நமக்கு தெரிந்த விஷயம். படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் சினிமாவில் ஸ்ட்ரைக் என்று அறிவித்துவிட்டனர். இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

இந்த நேரத்தில் விசுவாசம் படத்தில் பிரபல நடிகர் போஸ் வெங்கட் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வந்தது. இதுகுறித்து போஸ் வெங்கட் ஒரு பேட்டியில், வீரம் படத்தில் அதுல் குல்கர்னிக்கும், என்னை அறிந்தால் படத்தில் வில்லன் ஆஷிஷ் வித்யாத்திக்கும் நான் தான் டப்பிங் செய்தேன்.

அந்த சமயத்தில் அஜித் அவர்களை சந்தித்தேன், என்னுடைய குரலை கேட்டுவிட்டு என்ன வாய்ஸ் உங்களுடையது என்று பாராட்டினார். பின் சிவா அவர்களிடம், போஸை இன்னும் நம்ம படத்தில் நடிக்க வைக்காம இருக்கோமே என்றார். அப்போது அவர் கூறியது விசுவாசம் படத்தில் நடக்க இருக்கிறது.

எனக்கு மே மாதம் படப்பிடிப்பு என்று கூறியிருக்கிறார்கள், அஜித் அவர்களை மீண்டும் சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன், படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரமாக இருக்கும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ