2.O-வில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய் என்ன வேடம் தெரியுமா

நடிகர் அக்ஷய்குமார் மற்றும் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் பிரமாண்ட படமான “2.0” நடிகை ஐஸ்வர்யா ராய் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

எந்திரன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராய். ஆனால்,  2.0 படத்தில் நடிகை எமி ஜாக்சன் கதாநாயாகியாக நடித்துள்ளார்.

இருந்தாலும், படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார் என்ற நம்பதகுந்த தகவல்கள் வந்துள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது 2019 பொங்கலுக்கு படம் வெளியாகும் என தெரிகிறது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை இலங்கையை தாயகமாக கொண்ட லைகா நிறுவனம் பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ