நடிகை தனுஷ் செய்த வேலை வாந்தி எடுத்த மேகா ஆகாஷ் என்ன நடந்தது

நடிகை மேகா ஆகாஷ் நடிகர் தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் மேகா ஆகாஷ். அவர் கூறியதாவது, படப்பிடிபிற்காக துருக்கி சென்றிருந்தோம். அங்கே ஒரு தெருவில் நானும் தனுஷும் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது, தனுஷ் பச்சை நிறத்தில் உள்ள ஒரு ஐஸ்க்ரீமை கொடுத்தார். கேமரா, ஆக்ஷன் சொன்னதும் நடிக்க ஆரம்பித்தோம். நான் ஐஸ்க்ரீமை சுவைத்தேன். ஆனால், அதன் சுவை மிகவும் கேவலமாக இருந்தது. வாயில் வைக்கவே முடியவில்லை. காட்சி படமாக்கப்பட்டுக்கொண்டிருப்பதால் அமைதியாக நடித்தேன். கட் சொன்னதும், உடனே உவ்வாக் என வாந்தி எடுத்துவிட்டேன்.

ஏன் இந்த ஐஸ்க்ரீமை எனக்கு கொடுத்தீர்கள் என்று கேட்டதற்கு, நான் ரேண்டமாகதான் எடுத்தேன். இது வந்துவிட்டது. சாரி, என்று கூறிவிட்டு வேறு ஐஸ்க்ரீமை வாங்கிகொடுத்தார் என்று கூறியுள்ளார் மேகா ஆகாஷ்.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ