சிம்புவை பற்றி நீங்கள் அறியாத ஒரு விஷயம் ஆச்சர்யமாக இருக்கிறதே

தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளை அடிக்கடி சந்திப்பவர் என்று பட்டியல் எடுத்தால் அதில் முதலில் நடிகர் சிம்புவின் பெயர் தான் வரும். கடைசியாக AAA பட தயாரிப்பாளருடன் சர்ச்சையில் சிக்கிய சிம்பு இனி நடிக்கவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு, இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடித்துவருகிறார். பல அக்ரீமெண்ட்களில் கையெழுத்திட்டு நடித்துக்கொண்டிருக்கும் அவர் ஆங்கிலத்தில் ஒரு படம் தயாரித்து வருகிறார்.

அந்த படத்தை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. என்ன தான் இவருக்கு நடிக்க தடை என்று கூறினாலும், இவர் பல படங்களில் நடிப்பதோடு, சில படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். மேலும், பாடல்களும் பாடுகிறார். இந்த நிலையில், சிம்புவை பற்றி நாம் அறியாத விஷயங்களை Rj விஜய் கூறியுள்ளார்.

 

 

சிம்பு என்றால் சர்ச்சை, காதல் என்று தான் பலர் யோசிப்பார்கள். ஆனால் சிம்பு அதிக புத்தகங்கள் படிக்கும் நபர். ரூமிற்கு சென்று பார்த்த போது தான் எனக்கு தெரிந்தது என்று கூறினார் Rj விஜய். மேலும், Rj விஜய்யின் சில மேடை பேச்சுக்களை பார்த்த சிம்பு பாராட்டும் விதமாக அவரது வீட்டிற்கே அழைத்து புத்தகங்களை பரிசாக கொடுத்துள்ளார். சிம்புவிற்கு அதிகம் படிப்பதில் ஆர்வமாம்.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ