சதிஷிற்கு வாய்ப்பு கொடுக்காததால் கொந்தளித்த சிவகார்த்திகேயன்

சினிமாவில் பல துறைகளில் கால் வைத்து, கடைசியில் ஹீரோவானவர் தான் சிவகார்த்திகேயன். இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்கள் கொடுத்த கதாநாயகன். இவர் தற்போது பொன்ராம் இயக்கத்தில், சமந்தா கதாநாயகியாக நடிக்கும் சீமராஜா படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்து சிவா ரவிக்குமார் இயக்கத்தில் தான் நடிக்கிறார்.

ஏ. ஆர். ரகுமான் இசையில் சயின்ஸ் பிக்ஷன் படமாக இந்த படம் அமையப்போகிறது. தற்போது ஸ்டிரைக் நடப்பதால் படப்பிடிப்பு வேலைகள் துவங்காமல் உள்ளது. மேலும் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷாவும், கலை இயக்குநராக முத்துராஜூம் பணியாற்ற உள்ளாரகள். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தின் நகைச்சுவை நடிகராக நடிக்க சதீஷை சிவா பரிந்துரை செய்துள்ளார்.

 

 

ஆனால் இயக்குனர் ரவியின் முதல் படமான இன்று நேற்று நாளை படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்த கருணாகரன் தான் இந்த படத்திலும் காமெடியன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறியுள்ளார். இதனால் சிவகார்த்திகேயனுக்கு, இயக்குனர் ரவிக்கும் இடையில் சிறிய விரிசல் ஏற்பட்டுள்ளதாம்.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ