சின்ன வயசுலேயே ஆர்யா இப்படியா ஷாக் ஆன போட்டியாளர்கள்

சென்னை : நடிகர் ஆர்யா, தற்போது 'எங்க வீட்டு மாப்பிள்ளை' எனும் நிகழ்ச்சியின் மூலம் தான் திருமணம் செய்துகொள்ள மணப்பெண்ணைத் தேடி வருகிறார்.

இதில் 16 பெண்கள் பங்கேற்று உள்ளனர். கலர்ஸ் டி.வி-யில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு பெண்கள், இளைஞர்கள் மத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில், ஆர்யா தன் பள்ளிப் பருவத்திலேயே தனது சக மாணவி ஒருவருக்கு லிப்லாக் முத்தம் கொடுத்ததாக தெரிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

 

ஆர்யா

நடிகர் ஆர்யாவை, தமிழ் சினிமாவின் காதல் மன்னன் என்றுதான் அழைத்து வருகிறார்கள் ரசிகர்கள். தற்போது ஆர்யா திருமணத்திற்கு பெண்ணை தேர்ந்தெடுப்பதற்காக 'எங்க வீடு மாப்பிள்ளை' என்ற டி.வி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு வருகிறார்.

வரவேற்பு

கலர்ஸ் டி.வி-யில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் போது பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமான ஒரு தகவலை சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

முத்தம் கொடுத்திருக்கிறீர்களா

நிகழ்ச்சியில் எல்லோரிடமும், 'நீங்கள் யாருக்காவது லிப்லாக் முத்தம் கொடுத்திருக்கிறீர்களா?' என்ற கேள்வி கேட்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் ஆம் என்றனர். நடிகர் ஆர்யாவும் சற்று தயக்கத்தோடு ஆம் என்ற பதிலையே கூறினார்.

லிப்லாக் முத்தம்

நான் பள்ளி பருவத்தில் அதாவது 11-ம் வகுப்பு படிக்கும்போதே முதன்முறையாக ஒரு மாணவிக்கு முத்தம் கொடுத்தேன். கடைசியாக சென்ற வருடம் மேலும் ஒருவருக்கு லிப்லாக் முத்தம் கொடுத்தேன் என்று தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு போட்டியாளர்கள் கொஞ்சம் ஷாக் ஆனார்கள்.