நான் நிர்வாணமாக நடிக்கத் தயார் ஆனால் ஆண்ட்ரியா அதிரடி பேச்சு

சென்னை : நடிகை ஆண்ட்ரியா தைரியமான நடிகை என்பது சினிமா பரிச்சயமுள்ள ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும்.

ஆண்ட்ரியா எப்போதுமே வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பார். அதனாலேயே சினிமாவில் அவரது நடிப்புக்கு நிறைய பாராட்டுகள் கிடைக்கும்.

இந்நிலையில், 'திரையில் நான் நிர்வாணமாக கூட நடிக்கத் தயார். ஆனால் கதையில் அந்த காட்சி மிகவும் அவசியமானதாக இருக்க வேண்டும்.' என்று பேசியுள்ளார் ஆண்ட்ரியா.

ஆண்ட்ரியா

மாறுபட்ட கதாபாத்திரங்களிலும், வித்தியாசமான வேடங்களிலும் நடிக்க வேண்டும் என சில நடிகைகள் தான் விரும்புகின்றனர். அந்தவகையில் நடிகை ஆண்ட்ரியா எப்போதுமே வித்தியாசமான கதைகளைத் தான் தேர்ந்தெடுத்து நடிப்பார்.

தரமணி

கடந்த ஆண்டு ராம் இயக்கத்தில், 'தரமணி' படத்தில் இவரது நடிப்பு நல்ல பாராட்டைப் பெற்றது. கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' படத்திலும் நடித்திருக்கிறார் ஆண்ட்ரியா. இவர் நல்ல பாடகியும் கூட. அவ்வப்போது சமூக பணிகளுக்கு உதவும் வகையில் கான்செர்ட்டுகளும் நடத்துவார்.

ஆண்ட்ரியா பேச்சு

சமீபத்தில் மகளிர் தினம் தொடர்பாக சென்னையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் ஆண்ட்ரியா. அப்போது அவர் பேசும்போது, 'சினிமாவில் பெண்களுக்கு இன்னும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. ஆணாதிக்கம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. ஒரு நடிகையின் திறமை அவர் எந்த ஹீரோவுடன் நடிக்கிறார் என்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.

வாய்ப்பு இல்லை

தரமணி படத்திற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. ஆனால் அதன் பிறகு ஒரு பட வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. கவர்ச்சியாக ஆடை அணிந்து நடிப்பதால் மட்டும் மகிழ்ச்சியடைந்து விடுவேன் என எதிர்பார்க்காதீர்கள். ஒருபோதும் எனக்கு அது மகிழ்ச்சியை தராது.