நடிகையின் இரங்கல் கூட்டத்திற்கு ஃபுல்மேக்கப்பில் வந்து இப்படியா பல்லை காட்டுவது

சென்னை: மறைந்த பிரபல நடிகைக்காக சென்னையில் நடந்த பிரார்த்தனை கூட்டத்திற்கு வந்த பிரபலங்கள் சிலரை பார்த்து ரசிகர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.

வெளிநாட்டுக்கு சென்ற இடத்தில் குளியல் தொட்டியில் விழுந்து இறந்த நடிகைக்காக சென்னையில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகையின் கணவர், மகள்கள் கலந்து கொண்டனர்.

நடிகையின் குடும்பத்தார் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நடிகைகள் 
மேக்கப்

இரங்கல் கூட்டத்திற்கு வந்த கோலிவுட் நடிகைகள் சிலர் ஃபுல் மேக்கப் போட்டு வந்தனர். மேலும் ஏதோ விருது விழாவுக்கு வந்ததுபோன்று சிரித்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர்.


ரசிகர்கள் 
எரிச்சல்

நடிகைகள் ஃபுல் மேக்கப்பில் வந்து புகைப்படங்களுக்கு ஸ்டைலாக போஸ் கொடுத்ததை பார்த்து ரசிகர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். ஒரு உயிர் போனதை நினைத்து கூடிய கூட்டத்தில் இப்படியா நடந்து கொள்வது என்று கோபம் அடைந்துள்ளனர்.

 

நடிகர் 
சிரிப்பு

வாரிசு நடிகர் ஒருவரும் புகைப்படத்திற்கு சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளார். வழக்கமாக அவர் இப்படி எல்லாம் செய்ய மாட்டார் என்றாலும் நடிகையின் பிரார்த்தனை கூட்டத்தில் அவர் சிரித்தபடி நின்றது ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

 

மும்பை 
நடிகை

நடிகையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ஒருவர் சிரித்தபடி வந்ததை பார்த்து ரசிகர்கள் அவரை விளாசித் தள்ளினர் என்பது குறிப்பிடத்தக்கது.