போனி கபூர் காதலை சொன்னதும் கோபத்தில் 8 மாதமாக பேசாமல் இருந்த ஸ்ரீதேவி

மும்பை: போனி கபூர் தன் காதலை சொன்னதும் ஸ்ரீதேவி அவருடன் 8 மாதங்களாக பேசவே இல்லையாம்.

ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தையான பாலிவுட் பட தயாரிப்பாளர் போனி கபூர் நடிகை ஸ்ரீதேவியை பார்த்ததும் காதல் வசப்பட்டார். முதல் மனைவியிடம் உண்மையை சொல்லிவிட்டு ஸ்ரீதேவியை திருமணம் செய்தார் போனி.

இது குறித்து போனி கபூர் பேட்டி ஒன்றில் முன்பு கூறியதாவது,

ஸ்ரீதேவி

நான் ஸ்ரீதேவி மீது காதல் வயப்பட்டபோது அது முதலில் ஒருதலையாக தான் இருந்தது. ஒரு முறை சென்னையில் என் நண்பர், அவரின் மனைவி, நான், ஸ்ரீதேவி, அவரின் அம்மா மதிய உணவுக்கு ஹோட்டலில் சந்திப்பதாக இருந்தது.

முதல் முறை

ஸ்ரீதேவியின் அம்மாவுக்கு திடீர் என்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரால் வர முடியவில்லை. அது தான் ஸ்ரீதேவி தனது குடும்பத்தார் யாரும் இல்லாமல் முதல்முறையாக வெளியே வந்தது.

காதல்

மதிய உணவு சாப்பிட்ட பிறகு நான் ஸ்ரீதேவியை வீட்டில் விடச் சென்றபோது என் காதலை தெரியப்படுத்தினேன். அவருக்கு கோபம் வந்துவிட்டது. அதன் பிறகு 8 மாதங்களாக அவர் என்னுடன் பேசவே இல்லை.

குண்டுவெடிப்பு

1993ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தது. அப்போது ஸ்ரீதேவி சீ ராக் ஹோட்டலில் தங்கியிருந்தார். குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த உடன் ஸ்ரீயின் அம்மாவுக்கு போன் செய்து பேசி அவரின் மகளை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தேன்.