விஜய் ஏன் கலந்துகொள்ளவில்லை ஶ்ரீதேவி இரங்கல் கூட்டத்திற்கு செல்லாததன் காரணம்

சென்னை : இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் எதிர்பாராத வகையில் மரணம் அடைந்தார்.

அவரது மரணம் இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது. மும்பையில் அவரது இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

அவரது இறுதி சடங்கில் கலந்துகொள்ளாத விஜய், ஞாயிறன்று சென்னையில் நடைபெற்ற 16-ம் நாள் பிரார்த்தனை கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை.

ஶ்ரீதேவி மறைவு 
16-ம் நாள் பிரார்த்தனை கூட்டம்

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்காக பிரார்த்தனை கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்தது. இதில் சினிமா பிரபலங்கள் சூர்யா, ஜோதிகா, சிவகுமார், ஏ.ஆர்.ரஹ்மான், பிரபுதேவா, கார்த்தி என பலர் கலந்து கொண்டனர்.

 

ஷாலினி 
அஜித்

சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் ஸ்ரீதேவிக்கு நடைபெற்ற 16-ம் நாள் சடங்கில் நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்கனவே ஸ்ரீதேவிக்கு இறுதியஞ்சலி செலுத்த ஷாலினி மும்பை சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கலந்துகொள்ளாத விஜய் 
விஜய் ஆப்சென்ட்

இந்தக் கூட்டத்தில் விஜய் ஏன் கலந்துகொள்ளவில்லை என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. விஜய் கலந்துகொள்ளாததற்குக் காரணம், வரும் மார்ச் 16-ம் தேதி முதல் தயாரிப்பாளர் சங்கம் முழு ஸ்ட்ரைக் அறிவித்துள்ளனர்.

 

ஷூட்டிங் முடிக்க 
படக்குழு பாதிக்கும் என்பதால்

அதற்குள் வேகமாக படத்தின் காட்சிகளை எடுக்க படக்குழுவினர் வேலை செய்து வருகிறார்களாம். தான் ஸ்ரீதேவி கூட்டத்திற்கு வந்தால் படக்குழுவினர் கஷ்டப்படுவார்கள் என்பதால் விஜய் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது