அடிமேல் அடிவாங்கும் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் அடுத்தடுத்து இத்தனை படங்கள் ட்ராப் அப்போ மெர்சல்

தேனாண்டாள் ஃபிலிம்ஸ் கையை கடிக்காமல் சின்ன சின்ன பட்ஜெட்டில் கமர்ஷியல் படத்தை எடுத்து வெளியிட்டு லாபம் பார்ப்பது எப்படி என்பதை தமிழ் சினிமா தயாரிப்பாளருக்கு கற்று கொடுத்ததே தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் அமரர் ராம.நாராயணன் தான் இவர் அனைவருக்கும் ஒரு உதாரணமாக இருந்து வந்தார்.

sri-thenandal-films

sri-thenandal-films

இவர் காலமான பிறகு இவரது வாரிசுகள் தான் இந்த நிறுவனத்தை கைப்பற்றினார், ராசியாக இருந்த தயாரிப்பின் பெயரையும் மாற்றினார்கள் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் என்று இருந்ததை தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்ஸ் என்று மாறுதல் செய்தனர்.

sri-thenandal-films

sri-thenandal-films

சரி பெயரைத்தான் மாறினார்கள் இருக்கட்டும் ராம.நாராயணன் அவரின் கொள்கையையும் மாற்றிவிட்டார்களே, ஆம் சிறிய பட்ஜெட் பெரிய லாபம் என இருந்த அவரின் கொள்கையை, பெரிய பட்ஜெட் பெரிய லாபம் என மாற்றிவிட்டார்கள்.

sri-thenandal-films

sri-thenandal-films

அந்த வகையில் நடிகர் விஜய்யை வைத்து மெர்சல் படத்தை தயாரித்த நிறுவனம் படம் தாறுமாறு ஹிட் அடித்ததால் திரையரங்க உரிமையாளரும், விநியோகஸ்தர்களும் மட்டுமே லாபம் பார்த்தார்கள். அதேபோல் தயாரித்த நிறுவனத்திற்கு எதோ லாபம் கிடைத்தது என சொல்கிறார்கள். மேலும் தயாரிப்பு செலவு கொஞ்சம் அதிகம்தான்.

அதனால் இந்த நிறுவனம் தற்பொழுது பெரும் அடியை வாங்கிவருகிறது, ஆம் டிக் டிக் டிக் படத்தை வாங்கி வெளியிட திட்டம்மிட்டார்கள் ஆனால் படம் தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது, பிறகு சசி மற்றும் ஜி.வி பிரகாஷ், சித்தார்த் கூட்டணியில் உருவாக ரெட்டைக்கொம்பு படம்மும் ட்ராப் ஆனது .சந்தானம் மற்றும் எம்.ராஜேஷ் கூட்டணி படம், தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் படம், சங்கமித்ரா என ட்ராப் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. சங்கமித்திரா சில கோடி செலவுதான் ஆனது படம் இன்னும் தொடங்கிய பாடு இல்லை.

sri-thenandal-films

sri-thenandal-films

போட்ட பணம் திரும்பி வருமா என நினைத்துவிட்டார்கலாம். இப்படி தொடர்ந்து ட்ராப் ஆனா இப்படிதான் தோணும், தற்பொழுது ராம.நாராயணன் தொழில் யுத்தியை கையில் எடுக்க முடிவு செய்துள்ளார்களாம் அதாவது சிறிய பட்ஜெட் பெரிய லாபம் இதைதான்..