பில்லா தீம் மியூசிக் மாதிரி இமான் இசையில் அஜித்தின் இன்ட்ரோ சாங் ஓவர்

சென்னை : அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கவிருக்கும் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருந்தது.

ஆனால் திரைத்துறையினரின் வேலைநிறுத்தம் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஷூட்டிங் தொடங்குவதற்குள் இரண்டு பாடல்களை இசையமைத்து விட்டாராம் டி.இமான்.

அஜித் 
விசுவாசம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருந்தது. ஆனால் திரைத்துறையினரின் வேலைநிறுத்தம் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

முதல்கட்ட ஷூட்டிங் 
இரண்டு பாடல்கள்

இந்த நிலையில் விசுவாசம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பிற்காக இரண்டு பாடல்கள் வேண்டும் என்று இயக்குனர் சிவா, இசையமைப்பாளர் டி.இமானிடம் கேட்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த இரண்டு பாடல்களையும் இமான் முடித்துவிட்டாராம்.

 

டூயட் சாங் 
இன்ட்ரோ சாங்

இமான் தற்போது இசையமைத்த பாடல்களில் ஒன்று அஜித்தின் இன்ட்ரோ பாடல் மற்றொன்று டூயட் பாடல் என்று கூறப்படுகிறது. முதல்முறையாக அஜித் படத்திற்கு இசையமைப்பதால் அவர் கூடுதல் சிரத்தையுடன் இசையமைத்து வருகிறாராம்.


அஜித் தீம் மியூசிக் 
விசுவாசம் தீம் மியூசிக்

இந்தப் படத்தில் அஜித்துக்கான தீம் மியூசிக்கும் தயாராகிவிட்டதாகவும், 'பில்லா', 'பில்லா 2' ஆகிய படங்களின் தீம் இசைக்கு இணையாக இந்த தீம் மியூசிக் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. செம மாஸ் அஜித்தோடு, கிளாஸ்ஸான மியூசிக்கை தான் ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.