ஸ்ரீதேவியின் தங்கை எங்கே, ஏன் அமைதியாக உள்ளார் கணவர் பரபரப்பு பேட்டி

சென்னை: ஸ்ரீதேவியின் மரணம் குறித்து அவரின் தங்கை ஸ்ரீலதா ஏன் அமைதி காக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் தவறி விழுந்து உயிர் இழந்தார். திருமணத்திற்கு சென்றவர்கள் மும்பை திரும்பியபோதிலும் ஸ்ரீதேவியும், அவரின் தங்கை ஸ்ரீலதாவும் அங்கேயே தங்கியிருந்தனர்.

ஸ்ரீதேவி இறந்தது குறித்து ஸ்ரீலதா ஏன் வாய் திறக்கவில்லை என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து அவரின் கணவர் சஞ்சய் ராமசாமி கூறியிருப்பதாவது,

ஸ்ரீலதா 
கணவர்

எனக்கும், ஸ்ரீலதாவுக்கும் திருமணமாகி 28 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை வேணுகோபால் ரெட்டி என்ற பெயரை கேள்விப்பட்டதே இல்லை. அந்த நபர் போனி கபூர் பற்றி கூறியதில் உண்மை இல்லை.

 

போனி கபூர் 
ஆதரவு

துயரமான இந்த நேரத்தில் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. மொத்த குடும்பமும் போனி கபூருக்கு ஆதரவாக உள்ளது. என் மனைவி ஏன் அமைதியாக இருக்கிறார் என்று சில ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

 

மரணம் 
துயரம்

தங்கள் குடும்பத்தில் யாராவது இறந்துவிட்டால் அமைதியாக இல்லாமல் சுவர் மீது ஏறி கத்திக் கொண்டா இருக்க முடியும். நாங்கள் பப்ளிசிட்டி தேடாமல் அமைதியாக இருப்பதை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.

 

ஸ்ரீதேவி 
அன்பு

எங்கள் குடும்பத்தாருக்கு ஸ்ரீதேவி முன்மாதிரியானவர். அவர் மீது அதிக அன்பு வைத்துள்ளோம் என்கிறார் சஞ்சய் ராமசாமி. போனி கபூரால் ஸ்ரீதேவி துயரத்தில் வாழ்ந்து இறந்ததாக அவரின் அங்கிள் என்று கூறி வேணுகோபால் ரெட்டி என்பவர் பேட்டி அளித்திருந்தார். அதை தான் சஞ்சய் மறுத்துள்ளார்.