அட்ஜஸ்ட் செய்துகொள்ள சொன்ன தயாரிப்பாளர் காஜல் அகர்வாலின் அதிரடி பதில்

தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தவர் நடிகை காஜல் அகர்வால். அழகு, திறமை இருந்தும் இவரை மரத்தை சுற்றி டூயட் பாடுவதற்கும் மற்றும் கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்திகொண்டனர் இயக்குனர்கள்.

தற்போது இவரது மார்க்கெட் இறங்குமுகமாக உள்ளது. இதனால், இரண்டாம் கட்ட ஹீரோக்கள் மற்றும் இளம் ஹீரோக்களுடன் ஆட்டம் போட ஒப்புதல் தெரிவித்து வருகிறார். மேலும், கணிசமான சம்பளத்தையும் குறைத்து விட்டார். குறைந்த சம்பளத்தில் நடிகர் ரவிதேஜாவுடன் நடிக்க ஒப்புக்கொண்ட படத்தின் படப்பிடிப்பு தொடங்கியும் சொன்ன சம்பளத்தை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

இதனால் கடுப்பான காஜல் அகர்வால் ஷூட்டிங்-கிற்கு பேக்-அப் சொல்ல, சமாதானம் செய்ய முற்பட்டுள்ளார் தயாரிப்பாளர். மேலும், சம்பளத்தை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள் என்று தயாரிப்பாளர் கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த காஜல் அகர்வால் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படமென்றால் கூட சம்பளத்தை குறைத்துக்கொள்ளலாம். இந்த மாதிரியான மசாலா படத்திற்கு எதற்காக என்னுடைய சம்பளத்தை நான் குறைக்க வேண்டும் என்று அதிரடி பதிலை கூறிவிட்டு இடத்தை காலி செய்திருக்கிறார் அம்மணி.

இதனால், நடிகை அனு இம்மானுவேலை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு.