இவர் தான் உண்மையான அறம் நயன்தாரா புகைப்படம் உள்ளே

கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மலையேற்றப் பயிற்சிக்காகவும், துபாய், சவுதி அரேபியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் தேனி மாவட்டம் குரங்கணி பகுதியில் இருந்துள்ளார்கள். அந்த சமயத்தில் சற்றும் எதிர் பாரத விதமாக காட்டுத்தீ ஏற்பட்டதால் மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் வெளியேற முடியாமல் தவித்தனர்.

தகவலறிந்து அருகில் இருந்தோர் மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், வனத்துறையினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்ட ஆட்சியாளர் மரியம் பல்லவி பல்தேவ் தான் இந்த மீட்பு பணிகளை உடன் இருந்து கண்காணித்து வருகிறார்.

 

 

இவரின் இந்த பணிகளை பலரும் பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில், ஒரு நிஜ 'அறம்' மதிவதனி... மதுரை மாவட்ட ஆட்சியாளர் மரியம் பல்லவி பல்தேவ். #Theni district collector Smt Mariam Baldev, intent in the rescue mission. என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் பிரபல நடிகை கஸ்தூரி.