காவிரி விவகாரம் மட்டுமில்லை பல விஷயங்களில் ரஜினி நழுவுகிறார் கமல் கடும் விமர்சனம்

கோவை: காவிரி விவகாரம் என்றில்லை, பல விஷயங்களில் ரஜினிகாந்த் பதிலளிக்காமல் நழுவுகிறார் என்று கமல்ஹாசன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். இவர் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கமல் கூறுகையில் தண்ணீர் சேமிப்பில் விவசாயிகள் மட்டுமின்றி அனைவரும் ஈடுபட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.

கமலிடம் கேள்வி

காவிர பிரச்னையை தீர்க்க முடியாத பிரச்னையாக மாற்றி இருக்கக் கூடாது என்றார் கமல். அவரிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க ரஜினி மறுக்கிறாரே என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

நழுவுகிறார்

அதற்கு அவர் காவிரி விவகாரம் என்றில்லை பல விஷயங்களில் அவர் பதில் சொல்ல மறுக்கிறார். அந்த இடத்திலிருந்து நழுவுகிறார் என்றார் கமல்.

செய்தியாளர்களை சந்தித்தார்

ரஜினிகாந்த் கடந்த சனிக்கிழமை இமயமலை செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றார். அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலைக்கு செல்கிறேன். அங்கு எனது குருமார்களை பார்ப்பேன். பாபாவையும் சந்திக்கவுள்ளேன் என்றார்.

பெண்கள் பாதுகாப்பு

அப்போது அவரிடம் காவிரி விவகாரம் தொடர்பாகவும், சென்னை அஸ்வினி கொலை வழக்கு தொடர்பாகவும் கேள்விகளை நிருபர்கள் எழுப்பினர். அதற்கு அவர் எந்த பதிலையும் சொல்லாமல் வேகமாக சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

நண்பர்கள்

மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்குவதற்கு முன்பு கமல்ஹாசன் தனக்கு பிடித்த ரஜினியிடம் ஆசி பெற்று செல்வதாக அவரை போயஸ் கார்டனில் சந்தித்தார். மேலும் பிக்பாஸ் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த போதே அரசியலில் இறங்குவது குறித்து ரஜினியிடம் ரகசியமாக கூறியிருந்தேன் என்றார் கமல். மேலும் அவ்வப்போது 40 ஆண்டுகள் நண்பர்கள் என்று கூறும் கமல், தற்போது ரஜினியை விமர்சனம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.